முந்துது அதிமுக.. முறியடிக்க ஸ்டாலின் வியூகம்… EPS – இன் அதிரடி பிளானால் ஆடிபோன திமுக..!!

By Soundarya on மாசி 5, 2026

Spread the love

விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) முன்வைத்து வரும் அதிரடி வாக்குறுதிகள் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ‘குலவிளக்கு’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ₹2,000, ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மற்றும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் அதிமுகவின் செல்வாக்கை உயர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். திமுகவின் தற்போதைய மகளிர் உரிமைத் தொகையான ₹1,000-ஐ விட இது இருமடங்கு அதிகம் என்பதால், அதிமுக தேர்தலுக்கு முன்பே தனது வியூகத்தில் முன்னிலை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த அதிரடி அறிவிப்புகளால் சற்று அதிர்ச்சியடைந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுகவின் வாக்குறுதிகளை முறியடிக்கும் வகையில் தங்களது தேர்தல் அறிக்கை அமைய வேண்டும் என்று தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினருக்கு அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் ₹2,000 திட்டத்தை விட கூடுதல் பயனளிக்கும் திட்டங்கள், விலைவாசியைக் குறைப்பதற்கான புதிய அறிவிப்புகள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கூடுதல் சலுகைகளை உள்ளடக்கிய மெகா” தேர்தல் அறிக்கையை தயார் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே ‘வாக்குறுதி போர்’ உச்சக்கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.