actress rashmika mandanna

உங்கள் திருமணம் வருகிற 26ம் தேதியா? ராஷ்மிகா மந்தனா தந்த பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

By Elango on மாசி 5, 2026

Spread the love

இந்திய சினிமா ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு நடிகர் விஜய் தேவர கொண்டாவும் ராஷ்மிகாவும் சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர்கள் இருக்கும் இரு தரப்பு பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து வருகிற 26ம் தேதி உதய்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனையில் மிகவும் கோலாகலமாக அவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவியது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ராஷ்மிகாவிடம், உதய்பூரில் வருகிற 26ம் தேதி உங்களுக்கு திருமணமா? என்று கேட்ட போது அப்படி எல்லாம் இல்லையே என்று ராஷ்மிகா மந்தனா மறுத்திருக்கிறார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.