திரைப்பட நடிகர் கிஷோர் அண்மையில் வழங்கிய நேர்காணலில், “வாழ்க்கையில் பின்னோக்கிச் செல்லும் (Reverse) வாய்ப்பு இருந்தால், 2014-ஆம் ஆண்டிற்குச் சென்று நாட்டின் பிரதமரை மாற்றியிருப்பேன்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலையே மாறியிருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டில் தற்போது நிலவும் வெறுப்புணர்வு மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளார்.
வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்றும், அன்பு இல்லாத இடத்தில் எதுவுமே நிலைக்காது என்றும் அவர் ஓபனாகப் பேசியுள்ளார். இந்த நிலை இப்படியே நீடித்தால், எதிர்காலத்தில் இதனைச் சரி செய்யப் பல ஆண்டுகள் ஆகும் என்றும், மக்கள் மத்தியில் மனிதாபிமானமும் அன்பும் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும் என்றும் கிஷோர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
