ஜோத்பூரின் மத்தானியா பகுதியில் விளையும் காரமான பச்சை மிளகாய்களைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் புதிய முறையைக் கையாண்டுள்ளனர். ஜோத்பூரிலிருந்து ஹைதராபாத் சென்ற ஒரு தனியார் பேருந்தில், “உறவினர்களுக்கு அனுப்புகிறேன்” என்று கூறி மிளகாய் பார்சல்கள் ஏற்றப்பட்டுள்ளன. இருப்பினும், பயணத்தின் நடுவே அந்த பார்சல்களில் இருந்து வந்த மாறுபட்ட வாசனையால் சந்தேகமடைந்த பேருந்து ஓட்டுநர், அதனைச் சோதித்தபோது உள்ளே போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது அம்பலமானது.
<
जोधपुर में नशा तस्करों का एक ऐसा कारनामा सामने आया है जिसे देखकर पुलिस की आंखें भी फटी की फटी रह गईं। अक्सर क्राइम की दुनिया में नए-नए पैंतरे देखने को मिलते हैं, लेकिन इस बार तस्करों ने पूरी तरह ‘देशी जुगाड़’ भिड़ाया।
तस्करी का यह नया खेल हरी मिर्च के जरिए खेला जा रहा था। शातिर… pic.twitter.com/UsY5kAzHVi
— Ashok Shera (@ashokshera94) February 2, 2026
/div>
தற்போது இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா போலீசார் இணைந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். உள்ளூர் விளைபொருட்களைக் கடத்தலுக்குப் பயன்படுத்துவது அப்பகுதி விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் காவல்துறையினர் பார்சலை அனுப்பிய நபரைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
