மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான எஸ்.பி. வெங்கடேஷ், இன்று (பிப். 3) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். 1980 மற்றும் 90-களில் மலையாளத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்ந்த இவர், ‘ஜானகீய கோதாதி’ படத்தின் மூலம் அறிமுகமாகி, சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்குத் தனித்துவமான இசையை வழங்கியுள்ளார்.
தமிழில் ‘உனக்காக என் காதல்’, ‘பிஞ்சு மனசு’ போன்ற படங்களுக்கு இசையமைத்த இவர், மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘இந்திரஜாலம்’, ‘கந்தர்வம்’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முத்திரை பதித்தவர். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது மறைவுக்குத் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
