“பறவை போல மாறி பேசிய சூனியக்காரி?” வைரலாகும் விசித்திர வீடியோவால் பரவும் பீதி.. உண்மையா..? வதந்தியா..?

By Soundarya on மாசி 3, 2026

Spread the love
மெக்சிகோவில் உள்ள வெராக்ரூஸின் கேட்டமாகோ பகுதியில், விலங்காக மாறும் திறன் கொண்ட ஒரு சூனியக்காரி (Bruja) பிடிபட்டதாகக் கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பறவை வடிவில் இருந்த அந்த உருவம், பறக்கும்போதே மனிதக் குரலில் பேசியதால் அப்பகுதி மக்கள் அதனைப் பிடித்து அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. மாயமந்திரங்களுக்குப் பெயர் பெற்ற இப்பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த வீடியோ அல்லது சூனியக்காரி குறித்த தகவல்களுக்கு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. இது போன்ற மாயமந்திரக் கதைகள் கேட்டமாகோ பகுதியில் கலாச்சார ரீதியாகத் தொடர்ந்து நிலவி வருவதால், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. பல நேரங்களில் இது போன்ற காட்சிகள் வைரலாவதற்காக உருவாக்கப்படும் புனையப்பட்ட செய்திகளாகவே இருக்கும் என உண்மை கண்டறியும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.