“ஏன் இந்தப் படுக்கையைப் பயன்படுத்துறீங்க?” நோயாளியை பயங்கரமாக தாக்கிய மருத்துவர்… நடந்தது என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on மாசி 2, 2026

Spread the love

சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (IGMC) நோயாளி ஒருவர் மீது மருத்துவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்டோஸ்கோபி பரிசோதனை முடிந்து மூச்சுத்திணறல் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் அர்ஜுன் பன்வார், அங்கு வந்த மற்றொரு மருத்துவரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். காலிப் படுக்கையில் படுத்திருந்த போது மற்றொரு மருத்துவர், “ஏன் இந்தப் படுக்கையைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டு, அந்த நோயாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி, மருத்துவர் அவரைத் தாக்கியதோடு குத்தியதாகவும் கூறப்படுகிறது.

https://x.com/__________Nadia/status/2018186471451017719?s=20
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நோயாளி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு மருத்துவமனையிலேயே நோயாளிக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகப் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கைகள் எழுந்துள்ளன.