சூதாட்டத்தில் தோற்ற ஆத்திரம்…! வீட்டுக்கு மளிகைப் பொருட்கள் கேட்ட மனைவியை எரியும் விறகால் சுட்ட கணவன்… வேதனையை சொல்லி கதறும் மனைவி..!!

By Soundarya on மாசி 2, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆத்திரத்தில் தனது மனைவியை எரியும் விறகால் கணவர் சித்திரவதை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொராதாபாத்தின் சிவில் லைன்ஸ் பகுதியில் வசிக்கும் அக்தர் உசேன் என்ற மின் பணியாளர், நீண்ட காலமாக சூதாட்டத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் வீடு திரும்பிய அவரிடம், அவரது மனைவி ஜரிசா வீட்டுத் தேவைக்காக மளிகைப் பொருட்களை வாங்கி வருமாறு கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அக்தர் உசேன், ஜரிசாவை கொடூரமாகத் தாக்கியதுடன், அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகை எடுத்து அவரது உடலில் வைத்து சுட்டுள்ளார். கணவரின் சித்திரவதையில் காயமடைந்த ஜரிசா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது கணவர் சூதாட்டத்தில் தோற்கும் போதெல்லாம் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மொராதாபாத் காவல்துறை, தலைமறைவாக உள்ள அக்தர் உசேனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.