“இனி செல்போனை தொடமாட்டான்” மகனை அலற வைத்த தந்தையின் தந்திரம்… நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்திய மாஸ் ட்ரிக்…!!

By Soundarya on தை 30, 2026

Spread the love

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் மொபைல் போன் மற்றும் ஐபேட் அடிமைத்தனம் பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தொடக்கத்தில் அமைதிக்காகத் தரப்படும் இந்தச் சாதனங்கள், பின்னாளில் குழந்தைகளின் உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கும் போதையாக மாறிவிடுகிறது. இதனை முறியடிக்க தாய்லாந்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் கையாண்ட வினோதமான தந்திரம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது மகன் ஐபேட் பயன்பாட்டிற்கு அடிமையானதை மாற்ற, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கண்களைச் சுற்றி கருப்பு நிற மேக்கப் செய்துள்ளார்.

குழந்தை விழித்ததும், கண்ணாடியில் அந்த மாற்றத்தைக் காட்டி, அதிக நேரம் ஐபேட் பார்த்ததால் தான் கண்கள் இப்படி ஆகிவிட்டது என்று அவர் கூறியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுவன் அழுதுகொண்டே இனி ஐபேட் தொடமாட்டேன் என உறுதி அளிக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களில் சிலர் இது ஒரு புத்திசாலித்தனமான பாடம் என்று பாராட்டினாலும், மற்றவர்கள் குழந்தையை இப்படிப் பயமுறுத்துவது உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கவலையையும் பகிர்ந்து வருகின்றனர்.