Instagram-ல் இருந்து வெளியேறிய விராட் கோலி… 274 மில்லியன் ரசிகர்களை அதிர வைத்த 3 மணிநேர ‘பிளாக் அவுட்’.. பின்னணியில் நடந்தது என்ன..?

By Soundarya on தை 30, 2026

Spread the love

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் இன்று (ஜனவரி 30, 2026) அதிகாலை திடீரென மறைந்ததால் (Deactivated) இணையதளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 274 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட அவரது பக்கம் திடீரெனக் காணாமல் போனதால், அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகிவிட்டாரா அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் தவித்தனர்.  கோலியின் சகோதரர் விகாஸ் கோலியின் கணக்கும் இதே நேரத்தில் முடங்கியதால் இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையா என்ற சந்தேகமும் எழுந்தது

இருப்பினும், சில மணிநேரங்களுக்குப் பிறகு சுமார் காலை 8:30 மணியளவில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. அவரது பதிவுகள் மற்றும் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அப்படியே மீட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தற்காலிக தொழில்நுட்பக் கோளாறால் (Technical Glitch) ஏற்பட்டதா? அல்லது கோலி வேண்டுமென்றே தற்காலிகமாக நீக்கினாரா? என்பது குறித்து அவர் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.