“இடுப்பில் கை வைத்த ஆண்கள்” பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கே..? கண்ணீர் மல்க பதிவிட்ட நடிகை ..!!

By Soundarya on தை 25, 2026

Spread the love

கர்னால் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து நடிகை மௌனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். அங்கு கூடியிருந்த ஆண்கள் பலர் புகைப்படம் எடுப்பதாகக் கூறி, அநாகரீகமான முறையில் தனது இடுப்பில் கை வைத்ததாகவும், ஆபாசமான வார்த்தைகள் மற்றும் சைகைகளை வெளிப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பொதுவெளியில் ஒரு நடிகைக்கே இத்தகைய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது தன்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது பதிவில், “என்னை போன்றவர்களுக்கே இந்த நிலை என்றால், புதிதாகத் திரையுலகிற்கு வரும் பெண்களுக்கு என்ன நேரிடும் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை” என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பெண்களின் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள மௌனி ராயின் இந்த சமூக வலைதளப் பதிவு, தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பெண்களுக்கு எதிரான இத்தகைய அநாகரீகச் செயல்களுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.