ஹெரான் பறவைக்கே டஃப் கொடுக்கும் போலயே… பாம்பின் தந்திரமான மீன் வேட்டை – மிரளவைக்கும் காட்சி..!!!

By Soundarya on தை 25, 2026

Spread the love
வனவிலங்கு தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் எப்போதும் வரவேற்பைப் பெறுவது வழக்கம். அந்த வகையில், ஒரு பாம்பு மிகவும் அசாதாரணமான முறையில் மீன் ஒன்றைத் தந்திரமாக வேட்டையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காட்டு ஆற்றின் மேலே தொங்கிக்கொண்டிருக்கும் கயிற்றைப் பற்றிக்கொண்டு, ஆற்றில் நீந்தும் மீனை லாவகமாகப் பிடிக்கும் அந்தப் பாம்பின் வேட்டைத் திறன் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகப் பாம்புகள் இத்தகைய முறையில் வேட்டையாடுவது மிகவும் அரிது என்பதால், இந்தத் தருணம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. மீனைப் பிடித்தவுடன் ஆற்றில் குதிக்கும் அந்தப் பாம்பு, நீருக்குள்ளும் தனது இரையை விடாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறது. ஒரு அனுபவம் வாய்ந்த வேட்டைக்காரனைப் போலச் செயல்படும் அந்தப் பாம்பின் வேகம், ஒருவேளை அது கொக்குகளிடம் (Heron) பயிற்சி பெற்றிருக்குமோ என்று எண்ணும் அளவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.