“பெயரை எழுதி வைத்தே சாவேன்” சீனியர் மாணவரோடு காதல்… இனி இப்படி செய்ய மாட்டேன் என மன்னிப்பு கடிதம்… காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

By Soundarya on தை 23, 2026

Spread the love
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிசிஏ பயின்று வந்த மாணவி சோலை ராணி (19), வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி ஆசாரி காலனி பகுதியைச் சேர்ந்த அவர், தந்தை இல்லாத நிலையில் தாயுடன் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த இரவு, அவரது தாய் மருத்துவமனையில் பணியில் இருந்த நேரத்தில், மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவாகியுள்ளது. மாணவி மரணம் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கல்லூரியில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை இந்த சம்பவத்திற்கு பின்னணி காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதாவது அதே கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர் ஒருவருடன் இந்த மாணவி பழகியதாகவும், இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்  சொல்லப்டுகிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, மாணவியை கல்லூரி முதல்வர் அறை முன்பாக நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாகவும், கடுமையாக கண்டித்ததாகவும், ‘இனி இப்படிச் செய்ய மாட்டேன்’ என்று மன்னிப்பு கடிதம் ஒன்றை மாணவியிடமிருந்து பெற்றுக்கொண்டு, வீட்டிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அந்த மாணவி கல்லூரியிலிருந்து செல்லும்போது, ‘என் பெயரை எழுதி வைத்தே சாவேன்’ என கூறியதாகவும், அதன்பின் சில மணி நேரங்களுக்குள் அவர் உயிரிழந்ததாகவும், கூறப்படுகிறது.