போடு ரகிட ரகிட..! மாணவர்களுக்கு மீண்டும் கொண்டாட்டம்… அடுத்து 3 நாட்கள் தொடர் விடுமுறை..!!

By Soundarya on தை 21, 2026

Spread the love

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கான 5 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. இந்நிலையில், இந்த ஜனவரி மாத இறுதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஜனவரி 24 (சனிக்கிழமை), ஜனவரி 25 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜனவரி 26 (திங்கட்கிழமை – குடியரசு தினம்) எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படவுள்ளது. இருப்பினும், ஜனவரி 24ஆம் தேதி (சனிக்கிழமை) மட்டும் ஒரு சில பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலங்கள் மூலம் உறுதி செய்யப்படும்.