இந்தியத் திரையுலகின் ஜாம்பவானான அமிதாப் பச்சன், 80 வயதைக் கடந்தும் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சுமார் 1,600 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இந்தியாவின் பெரும் பணக்கார நடிகர்களில் ஒருவராகத் திகழும் இவரது குடும்பமே நட்சத்திரக் குடும்பமாகும். இவரது மனைவி ஜெயா பச்சன் எம்.பி-யாக உள்ள நிலையில், மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் புகழ்பெற்ற நடிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில், அமிதாப் பச்சன் வீட்டில் தங்கத்திலான கழிப்பறை (Gold Toilet) இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் வர்மா, கடந்த 2016-ஆம் ஆண்டு அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்தபோது அவர் வீட்டிற்குச் சென்றதாகவும், அங்கு தங்கம் பதிக்கப்பட்ட கழிப்பறையைப் பார்த்துத் தான் ஆச்சரியமடைந்ததாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
