பள்ளி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஏராளமான உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023-24 ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்களின் விவரங்களில் திருத்தம் இருந்தால், dgedsection@gmail.com என்ற மெயிலுக்கு ஜனவரி 27-க்குள் தெரிவிக்க வேண்டும். இதில், தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.