சொந்த வீடு கனவு நனவாகும்…! கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on தை 21, 2026

Spread the love

தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில் அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், புதிய வீடு கட்டுவோருக்கு 3.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 360 சதுர அடி பரப்பளவில் சமையலறையுடன் கூடிய வீட்டை அமைக்க வேண்டும்.

இதில் 300 சதுர அடி தளம் கான்கிரீட் கூரையுடன் இருப்பது கட்டாயமாகும். செங்கல் அல்லது நவீன கட்டுமானக் கற்களைக் கொண்டு சுவர்களை எழுப்ப வேண்டும் என்றும், மண் சுவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குடிசைகள் அல்லது ஓட்டு வீடுகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கே இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

   

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க நிலத்தின் ஆவணங்கள், குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் அவசியம் தேவை. தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

   

வரும் பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்த கூடுதல் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தகுதியுள்ள பயனாளிகள் தங்களின் ஆவணங்களுடன் உள்ளூர் ஊராட்சி அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். சொந்தமாக இடமிருந்தும் வீடு கட்ட வசதி இல்லாதவர்களுக்கு இந்த அரசு நிதியுதவி ஒரு பெரும் வரப்பிரசாதமாகும்.