ரேஷன் கார்டைத் தொலைத்த காரணத்தால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், புதிய ஸ்மார்ட் கார்டு நகலைப் பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறையைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. உங்கள் கார்டு கிடைக்கவில்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை. தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpds.gov.in மூலம் எளிதாக டூப்ளிகேட் கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த இணையதளத்தில் உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் திரையில் தோன்றும் ‘Captcha’ குறியீட்டைப் பதிவிட வேண்டும். பின்னர் உங்கள் போனுக்கு வரும் OTP எண்ணை உள்ளீடு செய்து உள்நுழைந்ததும், ‘Smart Card Print’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து உங்கள் ஸ்மார்ட் கார்டை நகல் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் எவ்விதத் தடையுமின்றி நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
