பொங்கல் நாளில் தமிழகத்தில் நிகழ்ந்த துயரம்…. 2 தொழிலாளர்கள் துடிதுடித்து மரணம்…!

By Nanthini on தை 14, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரவைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பராமரிப்புப் பணிகளுக்காக கரும்புப் பாகு சேகரிப்பு தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் கரும்பாவூரைச் சேர்ந்த மோகனசுந்தரம் (35) மற்றும் சிவகங்கை மதுரைச் சாலையைச் சேர்ந்த பொன்னழகு (59) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் தொட்டிக்குள் தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பாச்சேத்தி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழிற்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டிருந்ததா அல்லது பணியின் போது அஜாக்கிரதை காரணமாக இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உழைப்பாளர் தினத்திற்கு முதல் நாள் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.