தாய்லாந்தில் இன்று காலை 9:30 மணியளவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நக்கோன் ராட்சாசிமா மாகாணத்தில் பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் மீது ரயில்வே கட்டுமானப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த கோர விபத்தில் இதுவரை 22 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
