மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பார்வதி திருவோத்து, தனுஷுடன் நடித்த ‘மரியான்’ படப்பிடிப்பின்போது தனக்கு நேர்ந்த துயரமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட காட்சியில் முழுவதுமாக நனைந்த நிலையில் இருந்தபோது, மாற்று உடை இல்லாததால் தான் தங்கியிருந்த அறைக்குச் செல்ல அனுமதி கோரியுள்ளார்.
ஆனால், அங்கிருந்தவர்கள் அவரது கோரிக்கையை அலட்சியப்படுத்தியதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். அச்சமயம் தனக்கு மாதவிடாய் காலம் என்பதால் ஏற்பட்ட சிரமத்தை கூறியும், படப்பிடிப்புத் தளத்தில் இருந்த யாரும் அவருக்குத் துணை நிற்கவில்லை என்று பார்வதி கூறியுள்ளார். நூற்றுக்கணக்கான ஆண்கள் இருந்த அந்த இடத்தில் வெறும் மூன்று பெண்கள் மட்டுமே இருந்த சூழலில், அடிப்படை வசதிகளுக்குக் கூடப் போராட வேண்டியிருந்தாக கூறியுள்ளார்.
