BREAKING: “தனி அறையில் 2 மணி நேரம்” விசாரணை முடிந்து விஜய் வெளியே வந்தார்..!!

By Soundarya on தை 12, 2026

Spread the love

டெல்லி சிபிஐ (CBI) அலுவலகத்தில் இன்று ஆஜரான விஜய்யிடம் காலை 11:30 மணி முதல் மதியம் 3:45 மணி வரை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது. விசாரணை நிறைவடைந்த பின்னரும், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவர் ஒரு தனி அறையிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார்.

விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் அடங்கிய ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கையெழுத்திடுவதற்காகவே இந்த காலதாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது விஜய் சிபிஐ அலுவலகத்திலிருந்து வெளியே வந்துள்ளார். இந்த விசாரணை குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.