இம்மாத தொடக்கத்தில் (ஜனவரி 3, 2026), அமெரிக்கப் படைகள் வெனிசுலாவில் நடத்திய அதிரடித் தாக்குதலில் (Operation Absolute Resolve) அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நியூயார்க்கிற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மதுரோ கைதுக்குப் பிறகு, வெனிசுலாவின் துணை அதிபராக இருந்த டெல்ஸி ரோட்ரிக்ஸ் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால அதிபராக (Interim President) நியமிக்கப்பட்டு, ஜனவரி 5 அன்று பதவியேற்றார். டெல்ஸி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகச் செயல்பட்டு வரும் நிலையில், ட்ரம்ப் தன்னை “பொறுப்பு அதிபர்” என அறிவித்திருப்பது வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது
“வெனிசுலா அதிபர் நானே” தன்னைத்தானே அதிபராக அறிவித்துக்கொண்ட டொனால்டு ட்ரம்ப்… சர்வதேச அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெனிசுலாவின் “பொறுப்பு அதிபர்” என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு தனது ‘ட்ரூத் சோசியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெளியிட்ட பதிவில், தனது அதிகாரப்பூர்வ புகைப்படத்துடன் “வெனிசுலாவின் பொறுப்பு அதிபர், ஜனவரி 2026 முதல் பதவியில்” என்று குறிப்பிட்டுள்ளார்.
