அரசு மருத்துவமனைக்குள் பயங்கரம்…! ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை… சென்னையில் அதிகாலையில் அதிர்ச்சி…!!

By Soundarya on தை 12, 2026

Spread the love

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று அதிகாலை ஒரு ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆதி என்பவர் கொல்லப்பட்டார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில்  அனுமதிக்கப்பட்டிருந்த தனது தோழியைப் பார்ப்பதற்காக ஆதி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

ஆதி அங்கு வந்ததை அறிந்த அவரது தோழியின் உறவினர்களான சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகிய மூவரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே, ஆதி உயிரிழந்தார்.மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே இந்த சம்பவம் நடந்திருப்பது நோயாளிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய சூர்யா உள்ளிட்ட மூவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.