சொந்த வீடு கனவா…? மத்திய அரசின் மெகா பிளான் ‘PMAY-U 2.0’…! யாருக்கெல்லாம் கிடைக்கும்…? முழு விபரம் இதோ…!!

By Devi Ramu on தை 9, 2026

Spread the love

சொந்தமாக வீடு இல்லாத நகர்ப்புற மக்களுக்காக ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் புதிய வீடு கட்டவோ அல்லது வாங்கவோ நிதியுதவி பெற முடியும்.  குறிப்பாக, ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 9 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். 2029-ஆம் ஆண்டு வரை நீடிக்கவுள்ள இத்திட்டத்தில் பயன்பெற, விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சொந்தமாக நிலமோ அல்லது வீடோ இருக்கக்கூடாது என்பது கட்டாயமாகும்.

இந்தத் திட்டத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ‘ஜியோ-டேக்கிங்’ மற்றும் ‘பாரத்’ செயலி மூலம் கட்டுமானப் பணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. ஐந்து கட்டங்களாக நடைபெறும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். ஏற்கனவே மத்திய அல்லது மாநில அரசின் வீட்டு வசதி திட்டங்களின் கீழ் பயன் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. முதல்முறையாக வீடு வாங்கக் காத்திருக்கும் எளிய மக்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.