BREAKING: விஜய்க்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் தயாராகி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுகவுக்கு இடையே போட்டியாக தற்போது விஜயும் களத்தில் உள்ளார். இதனால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதில் விஜய்க்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்சார் வழங்கப்படாததால் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை. அதேபோல பராசக்தி படத்தில் தீ பரவட்டும், ஹிந்தி திணிப்பு உள்ளிட்ட முக்கிய வசனங்களுக்கு கட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறி உள்ளதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.