2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த தற்போதைய நிலவரம் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, தனது கட்சி மட்டுமின்றி ஓ. பன்னீர்செல்வம் (OPS) மற்றும் டி.டி.வி. தினகரன் (TTV) ஆகியோரை உள்ளடக்கிய அணிக்குச் சேர்த்து மொத்தம் 56 தொகுதிகளைக் கேட்பதாகத் தெரிகிறது .
ஆனால், அதிமுக தரப்போ பாஜக கூட்டணிக்கு அதிகபட்சமாக 20 முதல் 25 இடங்களை மட்டுமே ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. எனவே, கடந்த முறையை விட கூடுதல் இடங்களையும், செல்வாக்குள்ள மற்ற தலைவர்களையும் கூட்டணியில் இணைக்கும் திட்டத்துடன் பாஜக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.
