தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிஅவர்களின் இல்லத்திற்கு, பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வருகை தந்துள்ளார் .
அதிமுக கூட்டணியில் பாஜக தங்களுக்கு 56 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. வெறும் தொகுதிகள் மட்டுமின்றி, தேர்தலில் வெற்றி பெற்றால் அமையும் ஆட்சியில் உரிய பங்கு (Power Sharing) வழங்கப்பட வேண்டும் என்பதையும் பாஜக ஒரு முக்கிய நிபந்தனையாக முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
