இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டம் சலாசி பகுதியில் அதிகாலை 4 மணியளவில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் இருந்த மர்ம நபர்கள், அவ்வழியாகச் சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து அதன் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதோடு, உள்ளே இருந்த பயணிகளையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் துரதிர்ஷ்டவசமான தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அவர்கள் சென்ற வாகனம் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
SHOCKING INCIDENT!! 🚨
Near Salasi, Hamirpur, drunk men stopped a private bus at 4 a.m., broke its windows and assaulted passengers.
They fled from the scene and later crashed into a truck.
A girl from the bus was critically injured.❌ Zero tolerance for such lawlessness.… pic.twitter.com/i5vssKQCZf
— The Modern Himachal (@I_love_himachal) January 8, 2026
