போடு ரகிட ரகிட… இனி எங்கேயும் அலைய வேண்டாம்… Whatsapp-ல் தமிழக அரசின் சான்றிதழ்கள்… சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை தற்போது புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு சேவைகளை எளிதாக பெரும் வகையில் whatsapp செயலி மூலமாக புதிய சேவை முறை அறிமுகமாக உள்ளது. இதன் மூலமாக அரசு சேவைகளை whatsapp மூலமாக எளிதில் பொதுமக்கள் பெற முடியும். இனி பிறப்பு, இறப்பு உள்ளிட்டு 50 வகையான சான்றிதழ்களை whatsapp மூலம் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களைப் பெற 7845252525 என்ற Whatsapp எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும். அதில் வரும் அடுத்தடுத்த ஆப்ஷன்களை கிளிக் செய்தால் மிக எளிதில் சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம்.  குடிமக்களுக்கான சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதிலும், செயல்திறனை மேம்படுத்துவதிலும் இது ஒரு முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் அடிப்படையிலான குடிமக்கள் சேவைகள் தொடங்கப்படவுள்ளன.