காலையிலேயே குட் நியூஸ்…. பொங்கல் பரிசு பணம்.. புத்தம் புதிய அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் நிலையில் 3000 ரூபாய் ரொக்க தொகையும் வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் விநியோகம் ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில் நேற்று முதல் தமிழக முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் சிலருக்கு டோக்கன் கிடைக்காததால் பொங்கல் பரிசு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அப்படியான ரேஷன் அட்டைதாரர்கள் உடனடியாக அல்லது ஜனவரி 13ஆம் தேதிக்கு முன்பாக ரேஷன் கடைகளுக்கு சென்று முறையிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 13ஆம் தேதி நேரடியாக கடைக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.