அடுத்த பரபரப்பு… புதிய கட்சியாக மீண்டும் NDA கூட்டணியில் இணையும் ஓபிஎஸ்… எடப்பாடிக்கு எதிராக பாஜக போட்ட மாஸ்டர் பிளான்…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியை வலுப்படுத்த இரு கட்சிகளும் முயன்று வரும் நிலையில் சமீபத்தில் பாமக தலைவர் அன்புமணி இபிஎஸ்ஐ சந்தித்து கூட்டணியில் இணைந்தார். இதனை தொடர்ந்து அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இபிஎஸ் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிகிறது. பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் மற்றும் டி டி வி தினகரன் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டு வருவது பற்றி பாஜக தொடர் ஆலோசனைகள் ஈடுபட்டு வருகிறது. ஆனால் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு அதிமுகவில் மீண்டும் இடமில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

   

இதனிடையே திமுக விற்கு ஓபிஎஸ் செல்கிறார் என்ற பேச்சு எழுந்த நிலையில் டெல்லி வந்த இபிஎஸ் இடம் ஓபிஎஸ்ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து அமித்ஷா பேசியுள்ளாராம். மேலும் ஏற்கனவே அவர் தரப்பில் பதிவு செய்துள்ள Movement for growth and rights party என்ற புதிய கட்சியின் பெயரில் தனி கட்சியாக தான் ஓபிஎஸ் இணைகிறார் என்றும் அவர் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடுவார் என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.