ரூ.1020 கோடி ஊழலில் சிக்கிய அமைச்சர் நேரு சிறைக்குச் செல்வது உறுதி… மரண அடி கொடுத்த TVK… பரபரப்பு பேட்டி…!

By Nanthini on தை 8, 2026

Spread the love

சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் நடந்த ஊழல் மற்றும் அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய விவகாரம் குறித்து அமலாக்கத்துறை தரப்பில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை சார்பாக இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டது. ஒப்பந்தங்கள் தொடர்பாக 1020 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்துள்ளதாக ஆதார ஆவணங்களுடன் கடிதம் அனுப்பி அமலாக்கத்துறை முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்தது.

இந்நிலையில் அமலாக துறையின் கடிதங்கள் அடிப்படையில் அமைச்சர் கே என் நேரு மீதான ஊழல் புகார் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இது அமைச்சர் கே.என் நேருக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி விசாரணையை எதிர்கொள்வேன் என்ற கே என் நேரு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும் செந்தில் பாலாஜியை போல நேருவையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என பேச்சு எழுந்துள்ளது.

   

இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர் கே என் நேரு விரைவில் சிறைக்குச் செல்வதை இது யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக வெற்றி கழகம் கட்சியின் அருள்ராஜ் அதிரடியாக தெரிவித்துள்ளார். சுமார் 1020 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இத்தனை நாட்களாக இதனை மூடி மறைத்து அரசு தற்போது வேறு வழி இல்லாமல் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக அவர் சாடியுள்ளார்.

   

வெளியில் நடமாட முடியாது என்ற நிலை வந்ததும் விசாரணை நாடகத்தை ஆரம்பித்து உள்ளீர்கள் என்று விமர்சித்து உள்ள அருண்ராஜ், இது உண்மையான விசாரணையா அல்லது அமலாக்கத்துறை நேரடியாக களமிறங்கி உள்ளே தள்ளிவிடும் என்ற பயத்தால் போடப்பட்ட உத்தரவா என்ற கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஊழல் புகாரில் அமைச்சர் நேருவின் பெயர் சிக்கி இருப்பது அரசியலில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது