மருத்துவமனையில் சோனியா காந்தி… இந்த உடல்நல பிரச்சனை தான் காரணமா?… வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…!

By Nanthini on தை 8, 2026

Spread the love

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி உடல் நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு குழாய் அலர்ஜி மற்றும் காய்ச்சல் காரணமாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை கேட்டு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கவலை அடைந்துள்ளனர்.

அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் சோனியா காந்தி உடல்நிலை குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவருடைய உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு மற்றும் குளிர் காரணமாக அவருடைய ஆஸ்துமா பிரச்சனை தீவிரம் அடைந்ததாகவும் தற்போது அவரது உடல்நலம் முன்னேறி வருவதாகவும் கூறியுள்ளது. மேலும் நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.