அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச வேஷ்டி செயலை திட்டத்தை நிறுத்தி அதற்கு பதிலாக நேரடி பண பரிமாற்றம் மூலமாக ஆயிரம் ரூபாய் வரை வங்கி கணக்குகளில் இன்று முதல் வரவு வைக்க உள்ளது. ஒற்றை உறுப்பினர் கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும். அதேபோல இரண்டுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்தத் தொகையை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் ரேஷன் கடைகளில் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதற்கு பதிலாக பணமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 1.30 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பொங்கல் பணத்துடன் புதுச்சேரி அரசு பொங்கல் பண்டிகைக்கான பொருட்களையும் வழங்குகின்றது. இதில் நான்கு கிலோ அரிசி ஒரு, சர்க்கரை, பருப்பு வகைகள், 300 கிராம் நெய் மற்றும் ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை அடங்கும். இந்த பொருட்கள் கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
