சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதியிலிருந்து இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விடவில்லை. பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்றும் தங்கள் போராட்டத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்தனர். ஆசிரியர்களின் இந்த போராட்டம் தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதாவது பணிக்கு வராமல் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என அரசு எச்சரித்து இருந்தது. இருந்தாலும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று சென்னை எழும்பூரில் இடைநிலை ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 14 வது நாளாக அவர்களின் போராட்டம் இன்றும் நீடித்த நிலையில் போலீசார் ஆசிரியர்களை சற்று முன் குண்டு கட்டாக கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
