ஷோபாவில் விளையாடிய சிறுவன் கொடூர மரணம்… 8 மாடியில் காத்திருந்த எமன்… நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்…!

By Nanthini on தை 8, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அடுத்த முள்ளிப்பாக்கம் கூட்டுச்சாலை விஜயராஜா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடைய மகன் நவீன். ஒன்பது வயதாகும் இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் சிறுவன் தன் பாட்டியுடன் இருந்துள்ளான்.

மதியம் 3 மணி அளவில் எட்டாவது மாடியில் சோபாவில் விளையாடிய சிறுவன் அதிலிருந்து பால்கனியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்துள்ளான். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.