கேரள மாநிலம் திருச்சூர் அருகே மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஷில்பா (30) என்ற இளம் பெண்ணுக்கு திருமணம் ஆகி அட்ஷயஜித்(5) என்ற மகன் உள்ளார். இதனிடையே ஷில்பா நேற்று வீட்டில் உள்ள அறையில் வைத்து தன்னுடைய மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு வீட்டின் அருகில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஷில்பாவின் கணவர் வீட்டுக்கு வந்து அறையை திறந்து பார்த்தபோது மனைவி தூக்கிட்ட நிலையிலும் மகன் சடலமாக கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகனை கொன்று விட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
