குடும்பத்தோடு ஆசை ஆசையாக சுற்றுலா சென்ற நபர்… நொடி பொழுதில் 4 குழந்தைகளை பறிகொடுத்த சோகம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

By Nanthini on தை 7, 2026

Spread the love

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவர் துபாயில் பணியாற்றி வரும் நிலையில் தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் அங்கு ஒன்றாக வசித்து வந்துள்ளார். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை கழிப்பதற்காக அப்துல் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து அபுதாபி சென்றுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து திரும்பும்போது அவர்கள் பயணம் செய்த கார் திடீரென பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் அப்துலின் ஆண் குழந்தைகள் அசாஷ் (14), அம்மார் (12), அசாம் (7), அயாஸ் (5) ஆகிய நான்கு பேரும் அவர்களுடன் பயணித்த வீட்டு பணியாளர் புஷ்ரா (49) என்ற கேரள பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அப்துல், அவருடைய மனைவி மற்றும் அவர்களுடைய பெண் குழந்தை ஆகிய மூவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.