தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவை வழங்கப்படுவதுடன் இலவச வேஷ்டி சேலையும் 3000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பொங்கல் பரிசு பணம் 3000 ரூபாய் வழங்குவதற்கு 6936 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் முன்பு அறிவித்திருந்தார். இதனிடையே பொங்கல் பரிசு பணத்தை வழங்க 6687 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே வருகின்ற ஜனவரி 8 ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ஆனால் பொங்கல் தொகுப்பு தொடங்குவதற்கு அடுத்த நாள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதால் அன்றைய நாளில் அதாவது ஜனவரி ஒன்பதாம் தேதி ரேஷன் கடைகளுக்கு வேலை நாள் என உணவு வழங்கல் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக பிப்ரவரி 7 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
