சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மது விருந்துடன் புத்தாண்டைக் கொண்டாடியதாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதையை ஒழிப்பதற்கான இடமாக இருக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளை, போதையை வளர்க்கும் குடிப்பகங்களாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை எனச் சாடியுள்ளார். மேலும், ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திலேயே கஞ்சா செடி வளர்ந்துள்ளதைக் குறிப்பிட்டு, திமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் சீரழிந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
