குஷியோ குஷி… வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on தை 2, 2026

Spread the love

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் பாமாயில் என உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஏராளமான குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றன. இதில் வயது மூத்தவர்கள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களால் ரேஷன் கடைகளுக்கு சென்று உணவுப் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனை கருதி தமிழக அரசு சார்பாக தாயுமானவர் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான உணவுப்பொருட்கள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி 4,5 ஆகிய தேதிகளில் சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 990 நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது