தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பெப்சி அமைப்பின் தலைவர், இயக்குனர் ஆர் கே செல்வமணி கூறியதாவது, நான் கூட ஆரம்பத்தில் என்னுடைய சில படங்களில் இஸ்லாமியர்களை வில்லனாக காட்டியுள்ளேன். முன்பு இருந்த காலகட்டத்தில் இருந்த தூண்டுதலில் நான் இப்படியான கேரக்டர்களை வடிவமைத்து தவறு செய்து விட்டேன். நானும் போலீஸ் துறை சார்ந்த படங்கள் எடுத்து இருக்கிறேன்.
ஆனால் சிறை படம் பார்த்த பிறகு எனக்கு ரொம்பவும் அவமானமாக இருந்தது. சிறை படத்தில் இருக்கும் காவல்துறை காட்சி இந்திய ஒருமைப்பாட்டுக்கு சிறந்த உதாரணமாக இருந்தது. இந்த காட்சி மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை காலில் இருக்கும் செருப்பை கழட்டி அடிச்ச மாதிரி இருந்திருக்கும். அவ்வளவு அழகாக அந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள் என்று ஆர்கே செல்வமணி வெளிப்படையாக பாராட்டி இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
