ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு… விஜய்யுடன் கைகோர்க்கிறாரா?… அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி…!

By Nanthini on தை 2, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து கூட்டணி கணக்குகளும் கட்சி தாவல் குறித்த யூகங்களும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன் அரசியல் நிகழ்வுகள் குறித்து பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதிமுகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து பேசிய ஐயப்பன், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் கட்டிக் காக்கப்பட்ட இந்த இயக்கத்தில் உள்ள நிர்வாகிகளையும் மூத்த தலைவர்களையும் வெளியே துரத்திவிட்டு, சம்பந்தமில்லாத நபர்களை கூட்டணிக்கு வருமாறு கெஞ்சி வருவதாக இபிஎஸ் தரப்பை சாடினார்.

நடிகர் விஜயை கூட தங்களுடைய கூட்டணிக்கு வருமாறு அவர்கள் கூவி கூவி அழைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் அவர்களுக்கு சாதகமாக முன்வரவில்லை. அதிமுக இரண்டு கடைகளை விரித்து அமர்ந்திருந்தாலும் அங்கே எந்த வியாபாரமும் நடக்கவில்லை. அந்த இயக்கம் பலவீனமடைந்து வருகிறது. தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக மீண்டும் வலிமை பெற வேண்டும் என்றால் பிரிந்து கிடக்கும் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைைய வேண்டும். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் அதிமுகவோடு இணைந்து வந்த தேரை இழுத்தால் மட்டும்தான் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அம்மா ஆட்சியை உருவாக்க முடியும் என்று கூறினார்.

   

மேலும் ஓபிஎஸ் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்திற்குச் செல்லப் போகின்றார் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஐயப்பன், அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் யாரும் அத்தகைய முடிவை எடுக்கும் சூழலில் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். தேர்தல் வருவதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஓபிஎஸ் ஏற்கனவே கூறி இருந்ததை சுட்டிக்காட்டி வரப்போகும் தை மாதத்தில் தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்பதை கூறியுள்ளார்.