ஆஸ்திரேலிய வீரரான உஸ்மான் கவாஜா இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், கடந்த சில காலமாகவே ஓய்வு குறித்து நான் யோசித்து வந்தேன். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே இதுதான் என்னுடைய கடைசி தொடராக இருக்கும் என்று உள்ளுணர்வு சொன்னது. பயிற்சியாளரிடம் நான் இது பற்றி பேசினேன். 2027 ஆம் ஆண்டு நடைபெறும் இந்திய சுற்றுப்பயணம் வரை நான் விளையாட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ஆனால் இதுவே விடை பெறுவதற்கு சரியான தருணம் என்று நான் உணர்கின்றேன். எனக்கு மிகவும் பிடித்தமான சிட்னி மைதானத்தில், அதுவும் என்னுடைய சொந்த முடிவின்படி விடை பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 30 வயதான உஸ்மான் இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43.39 என்ற சராசரியுடன் மொத்தம் 6206 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாமல் 2013 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 40 ஒரு நாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணிக்காக அவர் விளையாடியுள்ளார். தற்போது அவர் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
