கொங்குவில் களமிறங்கிய செந்தில் பாலாஜி… ஸ்டாலின் மேசைக்குச் சென்ற உளவுத்துறை ரிப்போர்ட்… செம குஷியில் திமுக தொண்டர்கள்..!

By Nanthini on தை 2, 2026

Spread the love

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கிடைத்துள்ள உளவுத்துறை அறிக்கை கட்சியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அந்த அறிக்கையின் படி கோவையின் இரண்டு முக்கிய தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்றும் கூறப்படுகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலம் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

கொங்கு மண்டலத்தில் இருக்கும் 68 தொகுதிகளில் வெறும் 24 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றி இருந்தது. இதனால் ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து கொங்கு மண்டலத்தை மீட்கும் நோக்கத்தில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் பல்வேறு முக்கிய வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

   

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டதும் கட்சியினர் இடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கோவையில் முதல்முறையாக சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகத்தை அமைத்து களப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னாடி காரணமாக உளவுத்துறை மூலம் கிடைத்த அறிக்கை இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அறிக்கையின்படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் சிங்காநல்லூர் மற்றும் கோவை தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகள் திமுக வசம் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

   

அதனைப் போலவே மேட்டுப்பாளையம், கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் இந்த முறை கடும் போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் திமுகவினரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக இன்னும் சில தொகுதிகளில் திமுகவுக்கு சாதகமாக மாறும் என்ற நம்பிக்கையில் கட்சியினர் முழு வீச்சில் பணியாற்ற தொடங்கியுள்ளனர்.