ஏன் இப்படி பண்ணுறீங்க..? தான் உயிரோடு இருக்கும்போதே.. மனைவி கல்லறை பக்கத்திலேயே ரூ.12 லட்சத்தில் தனக்கு கல்லறை கட்டிய நபர்..!!

By Soundarya on தை 1, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் ஜகித்யால் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் நக்கா இந்திரையா (Nakka Indraiah), தான் உயிரோடு இருக்கும்போதே தனக்காக சுமார் ரூ.12 லட்சம் செலவில் பிரம்மாண்டமான கல்லறையைக் கட்டியுள்ளார். ஜகித்யால் மாவட்டத்தின் லக்ஷ்மிபுரம் கிராமத்தில், ஏற்கனவே காலமான தனது மனைவியின் கல்லறைக்கு அருகிலேயே இதைக் கட்டியுள்ளார்.முழுவதுமாக உயர்தர கிரானைட் மற்றும் பளிங்கு கற்களால் (Granite and Marble) கட்டப்பட்டுள்ள இந்த ஐந்து அடி ஆழமான கல்லறை, சிதையாமல் இருப்பதற்காகச் சிறப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லறையை வடிவமைக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள்  வரவழைக்கப்பட்டு, அவர்களின் உதவியுடன் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தனது மறைவுக்குப் பிறகு பிள்ளைகளுக்கு எந்தச் சிரமமும் இருக்கக் கூடாது என்பதற்காகவும், மரணம் என்பது தவிர்க்க முடியாத உண்மை என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தவும் இம்முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கும் இந்திரையா, தினமும் இந்தக் கல்லறைக்குச் சென்று அதன் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்து, அங்குள்ள செடிகளுக்கு நீர் ஊற்றிவிட்டுச் சிறிது நேரம் அமர்ந்து வருவதைத் தனது வழக்கமாகக் கொண்டுள்ளார்.