பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நபர் தனது இடுப்பில் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியைச் சொருகி வைத்திருந்துள்ளார். அவர் சோஃபாவிலிருந்து திடீரென எழுந்தபோது, துப்பாக்கியின் விசை தற்செயலாக அழுத்தப்பட்டு தோட்டா வெளியேறியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
A man died in Punjab’s Firozepur district after a loaded gun tucked into his waist accidentally discharged as he stood up from a sofa, causing panic among his family members.
Source: niitz_1/X pic.twitter.com/r8U3HQvwvu
— Mid Day (@mid_day) December 30, 2025
கண்கூடாக நடந்த இந்த விபத்தைக் கண்டு அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர். துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதைக் கையாளும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இது குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
