தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கும் இ-சேவை மற்றும் ஆதார் மையங்களுக்கு இன்று (டிசம்பர் 31, 2025) மற்றும் புத்தாண்டு தினமான நாளை (ஜனவரி 1, 2026) ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருட இறுதி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மையங்களும் வழக்கம்போல் செயல்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
