கூகுள் பே மற்றும் போன் பே போன்ற யூபிஐ (UPI) செயலிகளில் இன்று முதல் புதிய மாற்றங்களை இந்திய தேசியக் கொடுப்பனவு கழகம் (NPCI) அமல்படுத்துகிறது. இதன்படி, பயனர்கள் தங்களின் மாத சந்தா மற்றும் எஸ்ஐபி (SIP) முதலீடுகளுக்கான ‘ஆட்டோ பே’ (Auto Pay) வசதியை, ஒரு செயலியிலிருந்து மற்றொரு செயலிக்கு 90 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகமாகிறது. மேலும், இந்த மாற்றத்தின் மூலம் பயனர்கள் தங்களின் பல்வேறு ஆட்டோ பே பரிவர்த்தனைகளையும் ஒரே செயலியின் கீழ் கொண்டு வந்து மிக எளிதாக நிர்வகிக்க முடியும்.
பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், சிறு வணிகர்களைக் காக்கவும் ஒரு நாளைக்கான பணப் பரிவர்த்தனை வரம்புகள் மற்றும் ஒருமுறை அனுப்பக்கூடிய தொகை ஆகியவற்றில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை NPCI அவ்வப்போது மாற்றியமைக்கிறது. பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைக்கு UPI PIN எண்ணை யாருடனும் பகிரக்கூடாது. தெரியாத நபர்களிடமிருந்து வரும் ‘Request Money’ லிங்குகளைத் தவிர்க்க வேண்டும்.
